Pages

Monday, July 2, 2012

உதயனின் போக்கு பிழைக்குதே!!!!!

யாழ் குடாநாட்டின் முன்னனி நாளிதல்களில் ஒன்றான உதயன் நாளிதல் குடா நாட்டிற்கு பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் இராணுவக்கெடுபிடிகளிற்கு மத்தியில் மக்களிற்கு சேவை செய்து வந்துள்ளது. இன்னும் ஏன் செய்துகொண்டுதான் இருக்கின்றது. அதற்கு நன்றிக்கடனாகவோ என்னவோ மக்கள் அதன் உரிமையாளரை பாரளுமன்றுக்கெல்லாம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அன்மைக்காலங்களில் அதன் செயற்பாடு மற்றும் செய்திகளில் உள்ள நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.  உதாரணத்திற்கு யாழ்குடாநாட்டில் கடந்த வாரங்களாக முக்கிய செய்தியாக காணப்பட்ட போதனா வைத்தியசாலைப் பிரச்சனையில் உதயன் அவசரக்குடுக்கையாக குடாநாட்டின் பொது நலன் கருதாது செய்திகளை வெளியிட்டிருந்தது என்றே தோன்றுகின்றது. செய்திகளை ஆராயாது கிடைக்கும் செய்திகளை அப்படியே பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவே தோன்றியது. இதில் யார் முதலில் செய்தி தருகிறார்கள் என்ற ரீதியில் மற்றப்பத்திரிகைகளுக்கு வியாபாரப்போட்டியாகவே செய்திகள் பிரசுரிக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது. முன்னர் எதிர்க்கடைகள் இல்லாததால் பொதுநலத்துடனும் , இப்பொழுது பல எதிர்கடைகள் உள்ளதல் வியாபார நலத்துடனும் செயற்படுகிறார்களோ தெரியாது. ஆனாலும் பத்திரிகை தர்மம் ஒன்று உள்ளதல்லவா? 

மேற்குறிப்பிட்ட வைத்தியசாலை மற்றும் வைத்தியர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை தான்தோன்றித்தனமாக வெளியிட்டதால் நேர்மையான பல வைத்தியர்களின் பெயர்களும் நாறடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் ஆயிரம் நியாயம் கற்பிக்கலாம். அதற்குமுன் பத்திரிகையாளனின் குடும்பத்தைப்பற்றியோ அல்லது பத்திரிகையாளர்களைப்பற்றியோ ஒரு தவறான செய்தி வந்தால் அவர்கள் எப்படி உணர்வார்கள் என்று நினைத்துப்பார்க்கவேண்டும். ஏனெனில் எமது சமுதாயம் அப்படிப்பட்டது. இல்லாததையே இருக்கென்று சொல்லும் சமுதாயம் இருக்கென்று சொல்லிவிட்டால் என்ன ஆகும். உன்மையிலேயெ உதயனின் செய்திகளால் பல வைத்தியர்கள் மனதளவில் மிகவும் பாதிகப்பட்டிருக்கிறார்கள். தாங்களின் நேர்மைக்குக் கிடைத்த கைம்மாறாகப் பார்க்கிறார்கள்(தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும், அதற்காக நல்லவர்கள் பாதிக்கப்படக்கூடாது அல்லவா?) மாற்றலாகிப்போகலாமா என்று கூட யோசிக்கிறார்கள். பொது விடுமுறை நாட்களில் சுற்றுலாவுக்கு போகும் சகோதர மொழி வைத்தியர்களிற்குமத்தியில் (அது அவர்களின் சுதந்திரம்) விடுமுறை நாட்களிலுமே சேவைசெய்யும் பிரபல வைத்திய நிபுணர்கள் பலரை யாழ் போதனா வைத்தியசாலையில் காணலாம். அவர்கள் தாமாக மாற்றலானார்களானால் உதயனும் ஒரு முக்கிய காரணியாகும். 

இதேபோல் இன்னொரு செய்தி ஒரு பெண்ணைப்பற்றியது. அப்பெண் வயிற்றில் உள்ள கட்டியினால் இறந்ததற்கு(சங்காணையைச் சேர்த்தவர் என்று நினைக்கிறேன்) சட்டவிரோதமாக கருக்கலைப்புச்செய்ய முயன்றபோது இறந்ததாக எழுதியிருந்தார்கள். அடுத்த நாள் செய்தியைமாற்றிப் போட்டவர்கள் என்று நினைக்கிறேன் (மாற்றித்தான் போட்டிருந்தார்கள், குடும்பத்தாரிடம் மன்னிப்புக்கேட்டதாக பார்த்த‌ ஞாபகம் இல்லை). ஆனால், செருப்பால் அடித்துவிட்டு மன்னிப்பு கேட்பதென்பது ஏற்கமுடியாத ஒரு செயற்பாடு. அந்த குடும்பத்தின் நிலையை சற்று நினைத்துப்பார்க்க வேண்டாமா?. உதயனில் அடிக்கடி இது போன்ற தான்தோன்றித்தனங்கள் அதிகம் பார்க்கக்கூடியதாகவே உள்ளது. இது அவர்களின் தலைக்கனமாக கூட இருக்கலாம். ஏனெனில் நீதிமன்றமும் சில செய்தி தொடர்பாக செய்தி ஆசிரியரை மன்றில் மன்னிப்புக் கேட்கும்படி அறிவுறித்தியிருந்தது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. அதிக தலைக்கனம் நீண்ட நாள் நிலைப்பதில்லை. இது வரலாற்றில் நாம் கண்ட உண்மை. 

2 comments:

  1. சகோ இப்போது பத்திரிகைகள் கூட இணையத்தள ரேஞ்சுக்கு வந்திட்டுதுகள்...

    அதுக்குள்ள அன்று வெளியிட்ட அந்த கறுப்பு பக்கத்திற்கு ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டதாக பலர் குரல் கொடுத்தார்கள்... தப்பு செய்தால் கடவுள் என்றாலும் இறங்கி வரத் தானே வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ... அனாலும் யார் தப்புச்செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டும். உதயனாக இருந்தாலும் சரி நீதிபதியாக இருந்தாலும் சரி. அண்மையில் நீதிபதியும் (உதயனால்) தட்டிக்கேட்கப்பட்டிருக்கிறார். நீதிபதியும் கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டார் போல் தோன்றுகிறது. தேவை இல்லாமல் மக்கள் போராட்டத்தில் எல்லாம் தலையிடுகிறார்(அண்மையில் வைத்தியர்களின் போராட்டத்திலும் மூக்கை நுழைத்திருந்தார்). என்னவாக இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற எண்ணம் வரவேண்டும். நமக்குள் சண்டையிடுதல் நமக்குத்தான் பாதிப்பு.

      Delete