Pages

Friday, June 15, 2012

இரப்போரா நீங்கள்?

யாழ் குடாநாட்டு பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் இதர விற்பனை நிலையங்களில் வேலை செய்வோர் மற்றும் உரிமையாளர்கள் சில விடயங்களை திருத்தவேமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். அவர்கள் திருத்துவதற்குப் பல இருந்தாலும், வாடிக்கையாளர்களாகிய எம்மை பாதிக்கும் அல்லது கடுப்பேத்தும் விடயமும் உள்ளாதால் தான் நான் எனது உள்ளக்கிடக்கைகளை கொட்ட இடமில்லாமல் இங்கு கொட்ட வேண்டியதாய் போய்விட்டது. வேறோன்றுமில்லை. வாடிக்கையாளர் சேவையைத்தான் சொல்கிறேன்.
நீங்கள் யாரும் இதனை அனுபவித்தீர்களோ தெரியாது, ஆனால் நான் அனுபவித்ததனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு பொருள் வாங்க கடைக்குப் போகின்றோம். பொருள் வாங்கியாச்சு. காசு கொடுக்கப்படுகிறது. மீதி பெறப்படுகிறது. வேலை முடிந்துவிட்டது.  சரி, காசு எப்படிக்கொடுத்தீர்கள்? அனேகமாக கையில் கொடுத்திருப்பீர்கள். மீதி எப்படி வாங்கினீர்கள்? மேசையில் வைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்கொண்டு போகவேண்டியது தான். அதுதான் மீதியைக் கொடுத்துவிட்டார்களே, கையில் கொடுத்தால் என்ன? மேசையில் வைத்தால் என்ன? என்கின்றீர்களா? அப்படியானால் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் பிச்சையா எடுக்கிறீர்கள்? வாடிக்கையாளர்களுக்கு என்று சில உரிமைகள் உள்ளது.  அவை கிடைக்காவிட்டால் கேட்டுப்பெறவேண்டும். கேட்டும் கிடைக்காவிட்டால் போராடிப்பெற்றுக்கொள்ளுங்கள். வன்முறையால் அல்ல, அகிம்சையால். வன்முறை எதற்கும் தீர்வாகாது, இது பட்டறிவு. நான் மேற்கூறிய உதாரணம் இலகுவாக விளங்குவதற்காகவே. ஆனால் எல்லா இடங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது சேவை பெறுனர்களுக்கு சில பல உரிமைகள் உள்ளன. அவை கடைகள் மட்டுமல்ல, அரசாங்கத்திணைக்களங்கள், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள், போக்குவரத்து சேவைகள் என்று இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். இலங்கை மக்களாகிய நாம் எல்லாவற்றையும் சகித்து அனுசரித்துப் பழகாமல் அவற்றிலிருந்தும் சற்று வெளிவருவோமாக!!!.

3 comments:

  1. சின்ன உரிமையானாலும் அது எமக்கானதே என நாசுக்காக சுட்டியுள்ளீர்கள் சகோ நன்றி..

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ. எல்லாமே கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கிறது.

      Delete
  2. உங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகசிறப்பான வடிவமைப்புடன் உங்களுக்கான ஓர் வலைத்திரட்டு

    ReplyDelete