இறுதி யுத்தத்தின் பின் இலங்கை மக்கள் அடைந்த நன்மைகளில் ஒன்று யாழ் கொழும்பு பயணம் இலகுவாக்கப்பட்டது. 2000 ரூபாய்க்குள் கொழும்பிற்குப் போய் வர முடியும். அதற்கேற்றால் போல் கொழும்பில் உள்ளவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கொழும்பிற்கும் மாறி மாறி அடிக்கடி பயணம் செய்கிறார்கள். இது ஒருவிதத்தில் நல்ல விடயமானாலும் தேவை கருதி பயனிக்கும் மக்களை பஸ் நடத்துனர்கள் மற்றும் உரிமையாளர்கள் படுத்தும் பாடு இருக்குதே சொல்லி மாளாது. பொது சேவைகளைப்பொறுத்தவரையில் மக்களும் சேவை வழங்குனரும் ஒருவரில் ஒருவர் தங்கி உள்ளனர். இந்த விடயம் போக்குவரத்து சேவைக்கும் பொருந்தும். ஆனால் அதனை சேவை வழங்குனர்கள் புரிந்துகொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இந்த விடயத்தில் எல்லா பஸ் உரிமையாளர்களும் ஓட்டுனர்களும் ஒற்றுமையாகவே நடந்து கொள்கிறார்கள். சில ஓட்டுனர்கள் தங்களின் வாடிக்கையாளர்களாகிய பயணிகளிடத்தில் மிகக் கேவலமாக நடக்கிறார்கள். இன்னும் சிலர் பயணிகளிற்கு கை நீட்டும் அளவிற்குப் போயிருக்கிறார்கள். மனைவிக்கு முன்னாலேயெ வயதான கணவனை கை நீட்டி அடித்த சம்பவங்களும் நடந்தேறியிருக்கிறது. இது போன்ற சம்பவங்களிற்குப் பெயர் போனவர் அமராகிய நாடாளுமன்ற உறுப்பினரின் உறவுகள் என்றும் முனுமுனுக்கிறார்கள். இவற்றை உள்ளுர் பத்திரிகைகளும் கண்டும் காணாதது போல விட்டுவிடுகின்றன. அவர்கள் பாவம், அவர்களிற்கு வியாபாரிகளின் விளம்பரங்கள் தேவை. இவற்றினை கண்டுபிடித்து சரி செய்யவேண்டிய அரசாங்க அதிகாரிகளும் மக்களிற்கு துரோகம் இழைக்கிறார்கள்.
உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் தான் அப்படி என்றால் ஓட்டுனர்களும் பயணிகளை பலிக்கடாவாக்குகிறார்கள். பொதுவாக தொலை தூரச்சேவைகள் இரவிலேயே நடைபெறுகின்றது. அதற்கேற்றாற்போல் ஓட்டுனர்கள் தங்களை தயார்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் எத்தனை பேர் அப்படி செய்கிறார்கள் தெரியாது. ஏனெனில் நடைபெறும் விபத்துக்கள் ஓட்டுனர்கள் மேலும் சந்தேகத்தை வரவைக்கிறது. போதிய தூக்கம் இன்மை மற்றும் குடிபோதையில் வாகனத்தை செலுத்துதல் போன்ற சம்பவங்களும் நடை பெறுகின்றது. அதனால் விபத்துக்களும் மரணங்களும் தொடர் கதையாகிவிட்டது. பொலிசாரும் அதிகாரிகளும் இதனை கவனத்தில் எடுப்பது போல் தெரியவில்லை. அதெசமயத்தில் பயணிகளும் அளவுக்கதிகமான சகிப்புத்தன்மையுடன் வாழப்பழகிவிட்டார்கள். இதுபோன்ற சம்பவங்களை உடனடியாகவெ அத்துறைசார் அதிகாரிகளிடத்தில் முறையிட்டால் அதற்குரிய பலன் உடனடியாகக்கிடைக்காவிட்டாலும் பிற்காலத்தில் தவிர்த்துக்கொள்ளலாம். ஆகமொத்ததில் அனைத்துத்தரப்பும் தங்களின் பிழைகளை திருத்தி அதற்கேற்றாற்போல் நடக்காவிடில் இது ஒரு தொடர் கதையாகவெ இருக்கும். தொடர்ந்தும் பாதிக்கப்படப்போவது மக்களே!
நல்ல அனுபவம் போல இருக்கே சகோ...
ReplyDeleteதொடர்ந்து எழுதி சாதித்துக் காட்ட என் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்கிறேன்...
நன்றியுடன்
ம.தி.சுதா
வாழ்த்துக்கள் மற்றும் வலைத்தள தொகுப்பில் இனைத்தமைக்கு மிக்க நன்றி ம. தி. சுதா.
ReplyDeleteநான் மட்டும் இல்லை பலரது அனுபவங்கள் இதில் அடங்கியுள்ளது.